ERAVUR
Eravur ஏறாவூர்வெப் இற்கு அன்புடன் வரவேற்கின்றோம். இவ் இணையதளத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து தாங்களும் எங்களுடன் இணைந்து இவ் இணையதளத்தில் செய்திகள் மற்றும் ஆக்கங்களைப் பிரசுரித்து பிற உள்ளங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். - WWW.ERAVURWEB.TK

Join the forum, it's quick and easy

ERAVUR
Eravur ஏறாவூர்வெப் இற்கு அன்புடன் வரவேற்கின்றோம். இவ் இணையதளத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து தாங்களும் எங்களுடன் இணைந்து இவ் இணையதளத்தில் செய்திகள் மற்றும் ஆக்கங்களைப் பிரசுரித்து பிற உள்ளங்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். - WWW.ERAVURWEB.TK
ERAVUR
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வைரஸ் பாதித்த Pendrive-ல் இருந்து தகவல்களை மீள்பெறுவதற்கு
by Admin Tue Aug 13, 2013 9:53 am

» கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? அப்ப இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க…
by Admin Thu Mar 07, 2013 2:32 pm

» Automatic Restart Settin (Timing)
by Admin Thu Feb 28, 2013 1:45 pm

» www.evrtj.webs.com (Live Telecast)
by Admin Fri Dec 07, 2012 10:57 am

» அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக எப்படி நடனம் ஆடுகின்றார் பாருங்கள்.
by Admin Wed Nov 07, 2012 6:03 pm

» Islamic Books (quran,Hadhees) In Various Languages, for free to download....
by umairahmadh Sun Oct 21, 2012 12:19 pm

» ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன? (தொடர் 03,04)
by umairahmadh Thu Oct 11, 2012 8:46 pm

» ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன? -2
by umairahmadh Thu Oct 11, 2012 8:45 pm

» ஜின்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன? -1
by umairahmadh Thu Oct 11, 2012 8:44 pm

» விலங்குகளை வேட்டையாடும் மனிதர்கள்!
by Admin Tue Oct 09, 2012 1:26 pm

» கனப்பொழுதில் உயிர் தப்பியவர்களின் வீடியோக்கள் மிக மிக ஆச்சரியம் பார்க்க தவற வேண்டாம்.
by Admin Tue Oct 09, 2012 12:01 pm

» ஹேனியா!!!! எனும் குடலிறக்கம்
by umairahmadh Mon Oct 08, 2012 3:14 pm

» DR. Zakir Naik @ Malwana Srilanka மல்வானையில் இடம்பெற்ற ஸாக்கிர் நாயக் பிரச்சார நிகழ்வில் நடந்தது என்ன? ( சர்ச்சை ஏற்பட்ட வீடியோ இணைப்பு)
by umairahmadh Mon Oct 08, 2012 2:57 pm

» கேட் வில்லியம்ஸின் ஸ்காப் விவகாரம்: அச்சங்கொள்ளும் பிரித்தாணியர்
by Admin Sun Sep 30, 2012 8:52 pm

» ஏறாவூர் பேரணி...
by Admin Wed Sep 26, 2012 10:00 am

» ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது!
by Admin Thu Sep 13, 2012 9:51 am

» இஸ்லாமை விமர்சித்து திரைப்படம்: லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்
by Admin Wed Sep 12, 2012 5:52 pm

» Did u know how u born?
by Admin Wed Aug 29, 2012 2:27 pm

» Very Excellency
by Admin Fri May 25, 2012 10:18 am

» டுபாய் பெண்களின் புரட்சி...!
by Admin Fri May 25, 2012 9:42 am

» பொன்சேகாவை விடுவிக்க அரசாங்கம் அவசரப்பட்டது ஏன்?.
by Admin Tue May 22, 2012 5:39 pm

» குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கா? உப்புக் கரைசல் கொடுங்க
by Admin Tue May 22, 2012 3:11 pm

» குட்டீஸ்களை நோய்கள் அண்டாமல் இருக்க என்ன கொடுக்கலாம்?
by Admin Tue May 22, 2012 3:09 pm

» மாதவிடாய் பிரச்சினையா? மனதை தளரவிடாதீர்கள் !
by Admin Tue May 22, 2012 3:01 pm

» வரதட்சணை பற்றி இஸ்லாம்
by Admin Mon May 14, 2012 11:11 am

» கொழுப்பை குறைக்கும் வெள்ளைப்பூண்டு
by Admin Fri May 04, 2012 10:32 am

» தம்புள்ளை சம்பவத்தால் கொழும்பு மாநகரசபை கூட்டத்தில் அமளிதுமளி
by Admin Sat Apr 28, 2012 10:30 am

» இலங்கையில் இரண்டாவது பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்..? காத்திருக்கும் ஆபத்துக்கள்..!!
by Admin Fri Apr 27, 2012 10:24 am

» ஈமானிய உள்ளங்களே - தம்புள்ள இறையில்ல மீட்பின் அவசியம்..!
by Admin Thu Apr 26, 2012 10:02 am

» தம்புள்ள பள்ளிவாயல் உடைப்பு பற்றி அமைச்சர் ஹக்கீம்
by munas Tue Apr 24, 2012 12:16 am

» Dambulla Mosque Problem
by Admin Mon Apr 23, 2012 2:54 pm

» இலங்கை முஸ்லிம்களுக்கு இன்று திங்கட்கிழமை வரலாற்று முக்கியத்துவமிக்க தினம்
by Admin Mon Apr 23, 2012 10:01 am

» 3 வகையான வின்டோஸ் 8 தொடர்பாக மைக்ரோசொப்ற் அறிவித்தது
by Admin Thu Apr 19, 2012 10:10 am

» கட்டாரில் வாழும் இலங்கை முஸ்லிம்களை அமைச்சர் ஹக்கீம் சந்திக்கவுள்ளார்
by Admin Wed Apr 18, 2012 9:39 am

» கொலைவெறி புலிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான சாதனைகள் (படங்கள் + வீடியோ) - சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்
by munas Fri Apr 13, 2012 12:15 am

» லஞ்சம் கொடுக்காததால் பெண்ணுக்கு ஜீப்பில் பிரசவம்
by munas Thu Apr 12, 2012 1:10 am

» என்றும் இளமையாக இருக்க 20:20 டயட்
by munas Thu Apr 12, 2012 1:08 am

» குண்டு உடலை குறைக்க மாத்திரை சாப்பிடுறீங்களா? இதயம் பாதிக்கும்: எச்சரிக்கை ரிப்போர்
by munas Thu Apr 12, 2012 1:07 am

» சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!
by munas Thu Apr 12, 2012 1:05 am

» அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!!
by munas Thu Apr 12, 2012 1:04 am

Who is online?
In total there is 1 user online :: 0 Registered, 0 Hidden and 1 Guest

None

[ View the whole list ]


Most users ever online was 668 on Thu Aug 12, 2021 3:21 am
Google
www.evrtj.webs.com (Live Telecast)

Fri Dec 07, 2012 10:57 am by Admin

இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொழுகை முதல் ஏறாவூர் ஜாமிஅதுல் கைரிய்யா பெண்கள் அறபுக் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு நிகழ்வு ஏறாவூர் தவ்ஹீத் ஜூம்ஆ …

[ Full reading ]

Comments: 0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக எப்படி நடனம் ஆடுகின்றார் பாருங்கள்.

Wed Nov 07, 2012 6:03 pm by Admin

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக எப்படி நடனம் ஆடுகின்றார் பாருங்கள். நமது அரசியல் வாதிகள்




Comments: 0

விலங்குகளை வேட்டையாடும் மனிதர்கள்!

Tue Oct 09, 2012 1:26 pm by Admin



Comments: 0

கனப்பொழுதில் உயிர் தப்பியவர்களின் வீடியோக்கள் மிக மிக ஆச்சரியம் பார்க்க தவற வேண்டாம்.

Tue Oct 09, 2012 12:01 pm by Admin

NEAR DEATH & CLOSE CALL - The ultimative Collection (NEW 2012 Videoclip) BEST O

கனப்பொழுதில் உயிர் தப்பியவர்களின் வீடியோக்கள் மிக மிக ஆச்சரியம் பார்க்க தவற வேண்டாம்.






[ Full reading ]

Comments: 0

DR. Zakir Naik @ Malwana Srilanka மல்வானையில் இடம்பெற்ற ஸாக்கிர் நாயக் பிரச்சார நிகழ்வில் நடந்தது என்ன? ( சர்ச்சை ஏற்பட்ட வீடியோ இணைப்பு)

Tue Sep 25, 2012 3:34 pm by Admin

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (03) Zakir10

நேற்று முன்தினம் மாலை மல்வானையில் இடம்பெற்ற டொக்டர் ஸாக்கிர் நாயக் அவர்களின் இஸ்லாமிய பிரச்சார நிகழ்வு இறுதியில் இடையூறு …

[ Full reading ]

Comments: 3

கேட் வில்லியம்ஸின் ஸ்காப் விவகாரம்: அச்சங்கொள்ளும் பிரித்தாணியர்

Sun Sep 30, 2012 8:52 pm by Admin

dயானா-கேட் வில்லியம்ஸ் ஓர் வரலாற்றுப் பார்வை

மேற்கத்தைய நாகரிகத்தால் இங்கிலாந்து அரச பரம்பரையிலும் கலாச்சார மாற்றங்கள் அன்று ஏற்பட்டன. அது …

[ Full reading ]

Comments: 0

ஏறாவூர் பேரணி...

Wed Sep 26, 2012 10:00 am by Admin

ஏறாவூரின் வரலாற்றில் மாபெரும் ஆர்ப்பாட்டம் றசூலுல்லாஹ்வை இழிவுபடுத்தும் திரைப்படத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம். மற்றும் எதிர்ப்புப் பேரணி



[ Full reading ]

Comments: 0

ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது!

Thu Sep 13, 2012 9:51 am by Admin

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (03) 400820_367047143370658_2034129488_n

உண்மையான இறையச்சத்தோடு தியாகமும் தன்னார்வத் தொண்டும் எந்த சமுதாய மக்களால் அதிகமாக செய்யப்படுகிறதோ அவர்களை …

[ Full reading ]

Comments: 0

இஸ்லாமை விமர்சித்து திரைப்படம்: லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

Wed Sep 12, 2012 5:52 pm by Admin

இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபி (ஸல்) அவர்களையும் மோசமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து …

[ Full reading ]

Comments: 0


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (03)

Go down

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (03) Empty நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (03)

Post by Admin Thu Nov 24, 2011 10:02 am

முதல் கால கட்டம் -

அல்லாஹ்வின் பக்கம் அழைத்தல் இரகசிய அழைப்பு -

மூன்று ஆண்டுகள் “சூரா” முத்தஸ்ஸின் ஆரம்ப வசனங்கள் அருளப்பட்டதும் ஏகத்துவ அழைப்புக்கு நபி (ஸல்) அவர்கள் தயாரானார்கள். அக்கால மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். தங்களது முன்னோர்களை சிலை வணங்கிகளாகக் கண்டார்கள் என்பதைத் தவிர சிலை வணக்கத்திற்காக வேறெந்த ஆதாரமும் அவர்களிடமில்லை. பிடிவாதமும் அகம்பாவமும் அவர்களது இயல்பாக இருந்தன. அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு வாள் முனைதான் என்றும், அரபிய தீபகற்பத்தின் மார்க்கத் தலைமைக்கு தாங்களே மிகத் தகுதியுடையோர் என்றும் நம்பியிருந்தனர். அரபிய தீபகற்பத்தின் மார்க்கத் தலைமையிடமான மக்காவை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதை அப்படியே பாதுகாப்பது தங்களது பொறுப்பெனக் கருதினர். இப்பொழுது அவர்களது உணர்வில் ஊறிக் கிடந்த கொள்கைகளைத் தகர்க்கும் முயற்சியை திடீரென செய்தால் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே, அழைப்புப் பணியை இரகசியமாகத் தொடங்குவதுதான் விவேகமான செயலாக இருந்தது.

முந்தியவர்கள்!

நபி (ஸல்) அவர்கள் ஆரம்பமாகக் குடும்பத்தார் மற்றும் நண்பர்களில் தனது நம்பிக்கைக்குரியவர்களுக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்தினார்கள். உண்மையை நேசிப்பவர், நல்லவர் என தான் எண்ணியவர்களுக்கும் ஏகத்துவ அழைப்பு விடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களை எந்த வகையிலும் சந்தேகிக்காத ஒரு கூட்டம் அவர்களின் அழைப்பை ஏற்றது. இஸ்லாமிய வரலாற்றில் இவர்கள் “அஸ்ஸாபிக்கூனல் அவ்வலூன்” (முந்தியவர்கள்! முதலாமவர்கள்!) என்று அறியப்படுகின்றனர். இவர்களில் முதன்மையானவர் நபி (ஸல்) அவர்களின் துணைவியரான அன்னை கதீஜா (ரழி) ஆவார். பின்னர் நபி (ஸல்) அவர்களின் அடிமை ஜைது இப்னு ஹாஸா (ரழி), நபி (ஸல்) அவர்களின் பராமரிப்பிலிருந்த சிறுவர் அலீ (ரழி), உற்ற தோழரான அபூபக்ர் (ரழி) ஆகிய அனைவரும் அழைப்புப் பணியின் முதல் நாளிலேயே இஸ்லாமைத் தழுவினார்கள். பிறகு இறை அழைப்புப் பணிக்காக அபூபக்ர் (ரழி) ஆயத்தமானார்கள். அவர்கள் அனைவரின் நேசத்திற்குரியவராக, மென்மையானவராக, நற்குணமுடையவராக, உபகாரியாக இருந்தார்கள். அவர்களது அறிவு, வணிகத் தொடர்பு, இனிய பேச்சு ஆகியவற்றை மக்கள் மிகவும் நேசித்தனர். அவர்களில் தனக்கு மிக நம்பிக்கைக்கு உயவர்களை முதலில் அழைக்கத் தொடங்கினார்கள். அவர்களது அழைப்பை ஏற்று உஸ்மான் இப்னு அஃப்பான், ஜுபைர் இப்னு அவ்வாம், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஅது இப்னு அபீ வக்காஸ், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகிய எட்டு நபர்கள் இஸ்லாமை முதன்முதலாக ஏற்றுக் கொண்டனர். இவர்களையடுத்து இச்சமுதாயத்தின் நம்பிக்கையாளர் (அமீன்) என்று பெயர் சூட்டப்பட்ட அபூ உபைதா ஆமிர் இப்னு ஜர்ராஹ், அபூ ஸலாமா இப்னு அப்துல் அஸத், அவரது மனைவி உம்மு ஸலமா, அர்கம் இப்னு அபுல் அர்கம், உஸ்மான் இப்னு மள்வூன், அவரது இரு சகோதரர்கள் குதாமா, அப்துல்லாஹ், உபைதா இப்னு ஹாரிஸ், ஸயீது இப்னு ஜைது, அவரது மனைவி ஃபாத்திமா பின்த் கத்தாப் (உமர் அவர்களின் சகோதரி) கப்பாப் இப்னு அரத், ஜஃபர் இப்னு அபூதாலிப். அவரது மனைவி அஸ்மா பின்த் உமைஸ், காலித் இப்னு ஸயீது இப்னு ஆஸ், அவரது மனைவி உமைனா பின்த் கலஃப், அம்ரு இப்னு ஸயீது இப்னு ஆஸ், ஹாதிப் இப்னு ஹாரிஸ், அவரது மனைவி ஃபாத்திமா பின்த் முஜல்லில், கத்தாப் இப்னு அல் ஹாரிஸ், அவரது மனைவி ஃபுகைஹா பின்த் யஸார், மஃமர் இப்னு அல்ஹாரிஸ், முத்தலிப் இப்னு அஜ்ஹர், ரமலா பின்த் அபூ அவ்ஃப், நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் (ரழி அன்ஹும்) ஆகிய இவர்கள் அனைவரும் குறைஷி கோத்திரத்திலிருந்து இஸ்லாமை ஏற்றவர்களில் முதன்மையானவர்களாவர். அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், மஸ்வூத் இப்னு ரபீஆ, அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ். அபூ அஹ்மத் இப்னு ஜஹ்ஷ், பிலால் இப்னு ரபாஹ் ஹபஷி, ஸுஹைப் இப்னு ஸினான், அம்மார் இப்னு யாஸிர், யாஸிர், அவரது மனைவி சுமைய்யா, ஆமிர் இப்னு ஃபுஹைரா (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் மற்ற கோத்திரத்திலிருந்து இஸ்லாமை ஏற்றவர்களில் முதன்மையானவர்களாவர். பெண்களில் மேற்கூறப்பட்டவர்களைத் தவிர மற்றும் பலர் இஸ்லாமை ஏற்றனர். அவர்கள்: உம்மு அய்மன் பரகா ஹபஷியா, அப்பாஸின் மனைவி உம்முல் ஃபழ்ல் லுபாபஹ், அஸ்மா பின்த் அபூபக்ர். (அல்லாஹ் இவர்கள் அனைவரையும் திருப்தி கொள்வானாக!) (இப்னு ஹிஷாம்) “அஸ்ஸாபிகூனல் அவ்வலூன் - முந்தியவர்கள் முதலாமவர்கள்” என்று குர்ஆனில் அல்லாஹ் இவர்களை போற்றுகின்றான். இஸ்லாமை ஆரம்பமாக ஏற்றுக் கொண்ட ஆண், பெண்களின் எண்ணிக்கை 130 ஆகும். எனினும், இவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்கள் மறைமுகமாக அழைப்பு விடுத்த காலத்தில் இஸ்லாமை ஏற்றார்களா? அல்லது அவர்களில் சிலர் அதற்குப்பின் இஸ்லாமை ஏற்றார்களா? என்று உறுதியாக கூறமுடியாது.

தொழுகை

இஸ்லாமிய மார்க்கத்தில் தொழுகையே முதலாவதாக கடமையாக்கப்பட்டது. இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்: மிஃராஜுக்கு முன்பே நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் தொழுது வந்தார்கள் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால், ஐவேளைத் தொழுகை கடமையாவதற்கு முன் ஏதேனும் தொழுகைகள் கடமையாக்கப்பட்டிருந்ததா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. சிலர் “சூரிய உதயத்திற்கு முன்பும் மறைவதற்கு முன்பும் தொழுது கொள்வது கடமையாக இருந்தது” என்று கூறுகின்றனர். இப்னு ஹிஷாம் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் கணவாய்களுக்குச் சென்று இரகசியமாகத் தொழுது வந்தார்கள். ஒரு முறை நபி (ஸல்) அவர்களும் அலீ (ரழி) அவர்களும் தொழும்போது அபூதாலிப் பார்த்து அதுபற்றி விசாரித்தார். அவ்விருவரும் நற்செயலையே செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டதும் அதில் நிலைத்திருங்கள் என்று கூறினார். தொழுகை மட்டுமே முஸ்லிம்களுக்குக் கடமையாக்கப்பட்டிருந்தது. அதைத் தவிர வேறு வணக்க வழிபாடுகளோ, ஏவல் விலக்கலோ இருந்ததாகத் தெரியவில்லை. அக்கால கட்டத்தில் அவர்களுக்கு ஏகத்துவ விளக்கங்களைக் கற்றுக் கொடுத்து, நற்பண்புகளில் ஆர்வமூட்டி, அவர்களது இதயங்களைத் தூய்மைப்படுத்தும் இறைவசனங்கள் அருளப்பட்டன. மேலும், அவ்வசனங்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் அவர்கள் கண்முன் காண்பதுபோல் வர்ணித்தன. எழுச்சிமிகு உபதேசங்களால் இதயங்களைத் திறந்து ஆன்மாவுக்கு வலுவூட்டி அக்கால மக்கள் அதுவரை அறிந்திராத ஒரு புதிய நாகரீக வாழ்வுக்கு இறைமறை அவர்களை அழைத்துச் சென்றது. இவ்வாறே மூன்று ஆண்டுகள் கடந்தன. நபி (ஸல்) அவர்கள் அழைப்பை பகிரங்கப் படுத்தாமல் தனி நபர்களுக்கே அழைப்பு விடுத்தார்கள். குறைஷிகள் மட்டும் நபி (ஸல்) அவர்களின் அழைப்புப் பணியை அறிந்திருந்தனர். மக்காவில் இஸ்லாம் குறித்த சர்ச்சை எழுந்து மக்களும் அதுபற்றி பேசத் தொடங்கினர். இதைப் பிடிக்காத சிலர் முஸ்லிம்களை இம்சித்தனர். எனினும், நபி (ஸல்) அவர்கள் அம்மக்களின் மார்க்கத்தையும் சிலைகளையும் விமர்சிக்காததால் நபி (ஸல்) அவர்களின் அழைப்பை மக்காவாசிகள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
Admin
Admin
Admin
Admin

Posts : 693
Join date : 2011-11-21
Age : 12

http://asianweb.yours.tv

Back to top Go down

Back to top

- Similar topics
» நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (06)
» நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (07)
» நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (08)
» நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (09)
» நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (10)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum